Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கழுத்தில் உள்ள கருமை மறைவதற்க்கு சிறந்த வழி

In
Published: 06:54 GMT, Jul 6, 2017 |
0 Comments
1186
icon_com
This post was written by : Kemasiya
dark-neck-20-1466405715

கோதுமை மா, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மா, இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட வேண்டும். பின்னர் கழுவிக் கொள்ளலாம்.

அத்துடன் முட்டைக்கோஸ் அரைத்து அந்த சாற்றை கறுப்பாக மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சம் சாறு கலந்து தேய்ப்பது கழுத்தின் கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

மேலும் குறித்த கருமையை போக்குவதற்கு, பயிற்றம் மா, ஒலிவ் ஒயில், றோஸ் வோட்டர்,  இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினால் கருமை நிறம் படிப்படியாக மறைந்துவிடும்.

சிலருக்கு கடி போன்ற நோய்களின் விளைவாக கழுத்து கறுத்து போய் இருக்கும், அதனை போக்குவதற்கு சிறிது பால், தேன், எலுமிச்சம் சாறு, கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்தின் நிறம் படிப்படியாக மாறிவிடும் என்கின்றார்கள் இயற்கை முறையிலான அழகுக்கலை நிபுணர்கள்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg