Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கருசல் பகுதியில் பதற்றம்: பொலிஸார் குவிப்பு

In இலங்கை
Published: 10:18 GMT, Jul 9, 2017 |
0 Comments
2411
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணிப் பிரச்சினை தொடர்பாக கடந்த சில நாட்களாக அங்கு அசாதாரண சூழல் நீடித்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆலயத்தில் திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது ஆலயத்தின் மீது இனந்தெரியாதவர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பதற்ற சூழலை அடுத்து, அங்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை, கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணி எல்லைகள் இடப்பட்டு சுற்று வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்றன.

எனினும் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்தி வந்ததோடு, அங்கு அமைக்கப்பட்ட சுற்று வேலிக்கான தூண்களை பொலிஸார் முன்னிலையில் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

அதற்கு மறுநாள் குறித்த காணிக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் திரண்டு வந்து குறித்த காணிக்கு போடப்பட்டிருந்த ஏனைய வேலித்தூண்களை உடைத்ததோடு, அப்பகுதி மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாக கருசல் கிராம மக்கள் தெரிவித்தனர்.

அதுமட்டுமன்றி, கருசல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குச் சென்ற சிலர், வீட்டின் அறை ஒன்றிற்கு தீ வைத்துள்ளனர். இதன்போது அங்கு காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. மேலும், குறித்த வீட்டில் காணப்பட்ட மாதாவின் திருச்சொரூபமும் எரியூட்டப்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில தினங்களாக கருசல் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கும், பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த முஸ்ஸிம்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் அரசியல் பிரதிநிதிகள் அங்கு சென்று மக்களை அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அத்தோடு, மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்களாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதோடு, பொலிஸ் பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, வன்முறையை தூண்டிவிட்ட பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை மக்களின் உதவியுடன் பொலிஸார் கைதுசெய்த போதும், அரசியல் அழுத்தம் காரணமாக அவரை பொலிஸார் விடுவித்துள்ளதாக குற்றஞ்சாட்டும் கரிசல் கிராம மக்கள், சம்பந்தப்பட்டவர்களை உடன் கைதுசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

karusal (5) karusal (3) karusal (4) karusal (2)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg