Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நைரோபி பாடசாலை விடுதியில் தீ: 7 மாணவிகள் உயிரிழப்பு

In உலகம்
Updated: 10:09 GMT, Sep 2, 2017 | Published: 10:09 GMT, Sep 2, 2017 |
0 Comments
1238
This post was written by : Risha

கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள பாடசாலை விடுதியொன்றில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் ஏழு பாடசாலை மாணவிகள் உயிரிழந்ததுடன், பத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை குறித்த அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், குறித்த பாடசாலையை எதிர்வரும் இரு வாரங்களுக்கு மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. கல்வியமைச்சர் பாடசாலை நிர்வாகத்தினருக்கு இவ் அறிவிப்பை விடுத்துள்ளார்.

கென்யாவில் பாடசாலை விடுதிகளில் இதற்கு முன்னரும் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி கடந்த 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற தீ அனர்த்தமொன்றில் 58 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தனர். அதேவேளை, கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில் 8 மாணவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg