Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் சேதுபதி மாணவர்களுக்குக் கூறிய ஆலோசனை

In சினிமா
Published: 07:24 GMT, Sep 6, 2017 |
0 Comments
1327
This post was written by : Varothayan
vijay-sethupathi-stills-photos-pictures-101

தனது நடிப்பால் பல நடிகர்களின் ரசிகர்களையும் தன்பால் ஈர்த்துள்ள விஜய் சேதுபதி, தனக்குக் கிடைத்த ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்திற்கு ஏற்றது போலவே மக்களுக்கு பயனுள்ள பல விடயங்களையும் தான் பங்கேற்கும் நிகழ்வுகளில் கூறிச் செல்லத் தவறுவதில்லை.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பிரபலமான விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துக்கள் பலரையும் கவர்ந்திருந்ததை சமூக வலைத்தளங்களில் அக்காணொளி பகிரப்பட்டதை வைத்து அனுமானிக்க முடிகின்றது.

இந்நிலையில், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் இரங்கல் கூட்டம் அண்மையில் சென்னை லயோலா கல்லூரியில் இடம்பெற்றது. இதில் விஜய் சேதுபதி பங்கேற்றுப் பேசினார்.

நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட அனிதாவிற்காக, தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் இருக்கக் கூடிய எல்லா இடங்களிலும் கண்டனக் கூட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

அப்போது, ‘தற்போதைக்கு சினிமாவை விட அரசியலே முக்கியம். அடுத்த தலைமுறை, அரசியலைப் புரிந்துகொள்ள நிறைய முயற்சி செய்ய வேண்டும். சாதியால் நாம் பிளவுபட்டுக் கிடக்கிறோம். அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று பேசினார்.

சினிமாவில் உள்ள முக்கிய நடிகர் ஒருவர் மாணவர்களை சினிமாவின் பக்கத்தில் இருந்து திருப்பி, அரசியலை படிக்கச் சொல்லும் செயலானது பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg