Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அடிப்படை – உச்ச சட்டங்களுடன் புதிய அத்தியாயம் தேவை: சம்பந்தன்

In இலங்கை
Updated: 11:51 GMT, Sep 21, 2017 | Published: 11:49 GMT, Sep 21, 2017 |
0 Comments
1274
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
sampanthan

புதிய அரசியல் யாப்பின் ஊடாக அடிப்படை மற்றும் உச்ச அளவிலான சட்ட நடைமுறைகளுடன் புதிய எதிர்காலமொன்றை இலங்கைக்கு ஏற்படுத்துவது அவசியம் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உத்தேச அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான சிறந்த சந்தர்ப்பம் ஒன்று இலங்கைக்கு கிட்டியுள்ளதென குறிப்பிட்டுள்ள சம்பந்தன், இதனை பயன்படுத்தி நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் அரசியலமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தமிழ் பேசும் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நீண்டகால இலக்கை அடைய இதுவே வழியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரிக்கப்படாத நாட்டிற்குள் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு தனது ஆதரவை தெரிவிப்பதாகவும் சம்பந்தன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg