Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போரில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு இளவரசர் ஹரி அஞ்சலி செலுத்தினார்

In
Updated: 09:29 GMT, Nov 10, 2017 | Published: 09:29 GMT, Nov 10, 2017 |
0 Comments
1486
This post was written by : Risha

போரில் உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களையும் பொதுமக்களையும் நினைவுகூரும் நிகழ்வில் கலந்து கொள்வதற்ககாக பிரித்தானிய இளவரசர் ஹரி, வெஸ்ட்மின்ஸ்டர் புனித பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு விஜயம் செய்தார்.

நேற்று (வியாழக்கிழமை) அங்கு சென்ற இளவரசர், போரில் உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களையும் பொதுமக்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது, தேவாலயத்தின் வெளியே பொப்பி மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட சிலுவையொன்றில், சிலுவையொன்றை வைத்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.

போரில் தமது உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களையும் மக்களையும் நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி இந்நினைவுதினம் அனுட்டிக்கப்படுகிறது.

பொதுநலவாய நாடுகள் பலவற்றில் இந்நினைவுநாள் அனுட்டிக்கப்படுவதுடன், இந்நாளில் பொப்பி மலரை நினைவுக் குறியீடாக அணிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg