Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி புலோப்பளை பிரதேச மக்கள் அமைதிப்பேரணி

In இலங்கை
Updated: 09:22 GMT, Nov 13, 2017 | Published: 09:22 GMT, Nov 13, 2017 |
0 Comments
1296
This post was written by : Vithushagan

பச்சிலைப்பள்ளி – புலோப்பளை பிரதான வீதி பல ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் இருப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து இன்று (திங்கட்கிழமை) அமைதிப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய பயன்பாட்டு வீதியான இந்த வீதியை, கட்சிகள் பேதமற்று புனரமைத்துத்தர அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் எனவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் புலோப்பளை பிரதான வீதி பல ஆண்டுகளாக புனரைமைக்கப்படாது இருப்பதனை சுட்டிக்காட்டியும், இதற்கான தீர்வினைக் கோரியும் புலோப்பளை பிரதேச மக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் என்பன ஒன்றிணைந்து இந்த அமைதிப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்று காலை நடைபெற்ற இப்பேரணியில் புலோப்பளையில் இருந்து அமைதியான முறையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாகச் சென்ற மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.

முக்கிய பயன்பாட்டு வீதியான இதன் புனரமைப்பு குறித்து, ஏன் இதுவரை பொறுப்பானவர்கள் சிந்திக்கவில்லை எனவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர்.

எனவே, கட்சி பேதங்களை மறந்து, அரசியல்வாதிகள் இந்த வீதியை விரைவில் புனரமைத்துத் தர ஆவண செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

palai road (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg