Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்காவே காரணம்: ரஷ்யா குற்றச்சாட்டு

In உலகம்
Published: 05:54 GMT, Dec 1, 2017 |
0 Comments
1299
icon_com
This post was written by : Suganthini
russ

வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தை முடுக்கிவிட, அமெரிக்கா காரணமாக அமைந்ததாக, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெலருஸின் தலைநகரான மின்ஸ்க்கு விஜயம் செய்த அவர், ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று (வியாழக்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே, இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘வடகொரியா அதன் அணுசக்தித்திட்டத்தை முடுக்கிவிட, அமெரிக்காவின் நடவடிக்கைகளே காரணமாக அமைந்துள்ளது.  இந்நிலையில், வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது சாத்தியமாக அமையாது. இதற்குப் பதிலாக, அந்நாட்டுடன் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வடகொரியா புதிய வகையான ஏவுகணைச் சோதனையை நேற்றுமுன்தினம் (29ஆம் திகதி) நடத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டுடன் ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக்கொள்ள அனைத்து நாடுகளும் முன்வர வேண்டுமென்று அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் நிராகரித்துள்ள நிலையில், அவரது மேற்படி கருத்து வெளிவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg