Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போட்டியை நிறுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை: இலங்கை பயிற்சியாளர் கருத்து

In கிாிக்கட்
Published: 08:58 GMT, Dec 4, 2017 |
0 Comments
1853
icon_com
This post was written by : Anojkiyan
nik

காற்று மாசை காரணம் காட்டி இலங்கை வீரர்கள் போட்டியை நிறுத்த முற்பட்டதாக, இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், போட்டியை நிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ் தெரிவித்துள்ளார்.

கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டநேரத்தின் போது, மூச்சு விடவே சிரமப்பட்ட இலங்கை வீரர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு விளையாடிய நிலையில், உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் 17 நிமிடம் தடைபட்டது.

இந்நிலையில், காற்று மாசை காரணம் காட்டி இலங்கை வீரர்கள் நேரத்தை வீணடித்ததாகவும், கோஹ்லி முச்சதம் அடிக்கவிருந்ததையும் தடுத்ததாகவும் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ளஇலங்கை பயிற்சியாளர் நிக் போதாஸ், ‘டெல்லியில் காற்று மாசு பற்றி எல்லோருக்கும் தெரியும். வீரர்கள் ஆடுகளத்தில் மூச்சு விட சிரமப்பட்டனர். வழக்கமான சீதோஷ்ண நிலை இல்லாததால் வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உடை மற்றும் அறைக்கு திரும்பிய லக்மல், கமகே, தனஞ்சய ஆகியோர் தொடர்ந்து வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தனர்.

பின்னர், மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த பிரச்சினை கிரிக்கெட்டிற்கு புதிது. அதனால் என்ன செய்ய வேண்டும் என்பதனை நடுவர்களிடமே விட்டுவிட்டோம். நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாடதான் வந்துள்ளோம். அதை நிறுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. மேலும், வீரர்களின் பாதுகாப்பும் முக்கியம்’ என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)