Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2017ஆம் ஆண்டு பெரும் வெற்றியாண்டு: சிவகார்த்திகேயன்

In சினிமா
Updated: 12:05 GMT, Jan 1, 2018 | Published: 12:02 GMT, Jan 1, 2018 |
0 Comments
1128
This post was written by : Surenth
Sivakarthikeyan Velaikaran Movie Images

2017ஆம் ஆண்டை வெற்றியாண்டாக மாற்றிய அனைத்து ரசிகர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துகொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

வேலைக்காரன் திரைப்படம் வெற்றித் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ‘வேலைக்காரன் திரைப்படத்திற்கு இவ்வளவு ஆதரவு அளித்தமைக்கு நன்றி. நான் எதிர்பார்க்காத சில விடயங்கள் திரையரங்குகளில் இடம்பெற்றிருந்தன. இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் வழங்கிய நல்ல விஷயத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.

அதை பார்க்கும்போது மிகுந்த சந்தோஷமாக இருந்தது. அனைவருக்கும் மிக்க நன்றி. முதல் முறையாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்தேன். 2017ஆம் ஆண்டை சந்தோஷமாக முடித்து வைத்துள்ளீர்கள். அந்த சந்தோஷத்தோடு அடுத்த ஆண்டுக்கு செல்கிறேன்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg