Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாலிங்கவை புறக்கணிக்கும் மும்பை அணி

In கிாிக்கட்
Published: 04:59 GMT, Jan 4, 2018 |
0 Comments
1354
icon_com
This post was written by : Anojkiyan
prv_42e1d_1460891052

இந்தியாவில் நடைபெறும் ரி-ருவென்ரி லீக் தொடரான ஐ.பி.எல். தொடங்கிய காலத்தில் இருந்தே மும்பை அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, நடப்பு ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் நடைபெறவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தனக்காக விளையாடிய மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற அடிப்படையில், ரோஹித் ஷர்மா மற்றும் பாண்ட்யா சகோதரர்களை தக்கவைக்க மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இதுதவிர Right To Match என்ற அடிப்படையில் பொல் லார்ட் அல்லது பும்ராவை வாங்கலாம் என தெரிகிறது.

இதனால், நடப்பு ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித் மாலிங்க, இடம்பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

34 வயதான மாலிங்க சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து உபாதைக்குள்ளாகிவரும் மாலிங்க, இலங்கை அணியில் இடம்பெறுவதற்கே கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)