Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லியில் நிலவும் பனிமூட்டத்தால் விமான போக்குவரத்தில் சிரமம்!

In இந்தியா
Updated: 10:59 GMT, Jan 4, 2018 | Published: 10:59 GMT, Jan 4, 2018 |
0 Comments
1222
This post was written by : Kemasiya

டெல்லியில் நிலவும் பனிமூட்டம் காரணமாக  சுமார் 20க்கும் மேற்பட்ட விமான போக்குவரத்துக்களும்,  53ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த சுமார் 20 விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

குறிப்பாக பனி மூட்டம் காரணமாக 12 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 13 ரயில்கள் மாற்று பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவிவருகின்றது.

பனிபொழிவுடன் குளிர்ந்த காற்றும் வீசுவதால் வட மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது.

வடமாநிலங்களில் இன்று அதிகாலை குறைந்தபட்ச தட்பவெப்பநிலை 7டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தாக இந்திய  வானிலை மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg