Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கது – ஹிஸ்புல்லாஹ்

In இலங்கை
Updated: 16:30 GMT, Jan 4, 2018 | Published: 16:30 GMT, Jan 4, 2018 |
0 Comments
1144
This post was written by : Puvanes

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், நாட்டின் நலன் கருதி நடுநிலையான தீர்மானமாகவும் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார் இது வரவேற்கத்தக்கதோர் விடயமாகும் எனவும் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் குற்றவாளிகளை பாதுகாக்காது என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணமாகும் எனக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியின் ஒவ்வொரு முன்னெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்தின் நலன் கருதியதாகும் எனவும் மேலும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg