Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது டெல்லி நீதிமன்றம்.

In இந்தியா
Published: 09:26 GMT, Jan 5, 2018 |
0 Comments
1094
This post was written by : Arul Jesu

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவைதேடப்படும் குற்றவாளியாக அறிவித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபலதொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாவுக்குஅதிகமானகடனைபெற்றுஅதனைதிருப்பிசெலுத்தாமல் மோசடிசெய்துள்ளார்.

இந்தநிலையில் இந்தியாவின் பல்வேறுநீதிமன்றங்களில்  அவருக்குஎதிராகவழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுவிசாரிக்கப்பட்டுவருகின்றன.

எனினும் விஜய் மல்லையாதற்போது இங்கிலாந்தில் தலைமறைவாகஉள்ளநிலையில்,அவரை இந்தியாவிற்குஅழைக்க இந்திய அரசு இங்கிலாந்தில் சட்டநடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இவ்வாறானநிலையில் இங்கிலாந்துநிறுவனம் ஒன்றுக்கு2 இலட்சம் டொலர்களைசட்டவிரோதமாகபரிமாற்றம் செய்ததாக இந்திய அமலாக்கப்பிரிவு அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்தவழக்குடெல்லியில் உள்ளதலைமைமெட்ரோபாலிட்டன்நீதவான்நீதிமன்றத்தில்  விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் விசாரணைக்காக ஆஜராகுமாறு  நீதிமன்றம் பலமுறை  அறிவித்தல்  அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

இறுதியாக காலஅவகாசம் வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் அவரோஅல்லது அவரது சார்பில்  எந்தவொரு சட்டத்தரணியோ ஆஜராகவில்லை.

இதனை தொடர்ந்து, மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக  அறிவித்து டெல்லிமெட்ரோபாலிட்டன் நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)