Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் நாளை ஜனாதிபதியினால் கையளிப்பு!

In இலங்கை
Published: 13:27 GMT, Jan 7, 2018 |
0 Comments
1148
icon_com
This post was written by : Ravivarman
018

பாரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

நான்கு தசாப்தங்களின் பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நாளை (திங்கட்கிழமை) ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தலைமையில் மொரகஹகந்த அபிவிருத்தி திட்ட வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

மூன்று மாகாணங்களில் வாழும் ஆயிரக் கணக்கான விவசாய குடும்பங்களுக்கு நேரடிப் பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும் மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதி நீர்ப்பாசன திட்டமான மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தின் மூலம் முழு தேசத்திற்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கவுள்ளன.

மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தின் கீழ் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களில் 2000 குளங்களுக்கு புதிய நீர் கிடைக்கவுள்ளது.

இதனால் வடமேல் மாகாணத்தில் 303 குளங்களுக்கும் வடமத்திய மாகாணத்தில் 1600 குளங்களுக்கும் நீரை வழங்குவதுடன் நவ லக்கல மற்றும் மெதிரிகிரிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய நகரம் மற்றும் புதிய குடியேற்றங்களிலும் 48 புதிய குளங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இத் திட்டத்தின் காரணமாக நாவுல, லக்கல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெயர்ந்த சுமார் 3500 குடும்பங்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டு வருவதுடன், சொத்துக்களை இழந்தவர்களுக்கு நட்டஈடும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நீர்த்தேக்கத்தில் எதிர்பார்க்கப்படும் நன்னீர் மீன் உற்பத்தியின் அளவு வருடாந்தம் 3000 தொன்களாகும் என்பதுடன், இதன் மூலம் வருடாந்தம் 225 மில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மூலம் 25 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார முறைமையுடன் சேர்க்கப்படவுள்ளதுடன் இதன் மூலம் 336 மில்லியன் ரூபா எரிபொருள் மீதப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)