Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இடைக்கால அறிக்கையில் சமஷ்டி பண்புகள் உண்டு என்கிறார் தவராசா!

In இலங்கை
Updated: 10:54 GMT, Jan 11, 2018 | Published: 08:08 GMT, Jan 11, 2018 |
0 Comments
1412
This post was written by : Varshini

புதிய அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கையில் சமஷ்டிக்கான அடிப்படை பண்புகள் காணப்படுகின்றதென, வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ஏக்கிய ராச்சிய – ஒருமித்தநாடு என்பன குறித்து தெளிவான பொருள்கோடல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக வீணாக குழம்பத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதுபற்றி தெரிந்தவர்கள் அரசியல் லாபங்களுக்காகவே எதிர்க்கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் தவராசா முன்வைத்தார்.

இதேவேளை, இடைக்கால அறிக்கையில் சமஷ்டிக்கான அடிப்படை விடயங்கள் காணப்படுவதாகவும், அவற்றை செழுமைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மாறாக, குறித்த அறிக்கையை முற்றாக எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் கிடையாதென தவராசா மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg