Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைரமுத்துவை மன்னிப்பதே பண்பாடு – ஆண்டாள் விமர்சனம் பற்றி விவேக்!

In சினிமா
Updated: 16:45 GMT, Jan 11, 2018 | Published: 12:13 GMT, Jan 11, 2018 |
0 Comments
1183
This post was written by : Arul Jesu

ஆண்டாள் பற்றி விமர்சனம் செய்ததாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக நடக்கும் விமர்சனங்களை நிறுத்திவிட்டு, மன்னிப்பு கேட்ட அவரை மன்னிப்பது தான் பண்பாடு என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற கருத்தரங்கம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்ததாக பல விமர்சனங்கள் எழுந்திருந்தது.

இதனால் வைரமுத்துக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து வைரமுத்து, தனது பேச்சு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். அதன்பின்னரும் தொடர்ந்து வைரமுத்துக்கு எதிராக இந்து அமைப்புகளும், பாரதிய ஜனதாவினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எனவே வைரமுத்து மன்னிப்பு கேட்டதால் அதை ஏற்றுக் கொள்வதுதான் பண்பாடு என்று நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதில், அனைத்து மத ஆன்மீக உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும். தாயார் ஆண்டாள் இறையருள் பெற்ற கவி. ஆழ்வார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். யாரோ வெளிநாட்டில் எழுதிய கட்டுரை தேவையற்றது. கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்பதும், அவரை மன்னிப்பதும் பண்பாடு. என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Untitled 11

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg