Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்!

In சினிமா
Published: 09:50 GMT, Jan 12, 2018 |
0 Comments
1383
This post was written by : Vithushagan
maxresdefault

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தியை அவரது காதலர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் என்ற செய்தி பல மாதங்களாக பரவி வருகின்றது. இவர்கள் பொதுநிகழ்ச்சிகளின் போது இருவரும் ஒன்றாக சேர்ந்து சென்று வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த பட புரமோஷன் நிகழ்ச்சிக்கா க விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத்திடம் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் பல கேள்விகளை கேட்டார்.

அதில் குறிப்பாக விக்னேஷ் சிவனிடம் உங்கள் திருமணம் எப்போது? யாருடன் திருமணம்?, பிடித்த நடிகை யார்? என கேட்டு குடைந்தார். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சமாளித்துப் பார்த்த விக்னேஷ் சிவனை அந்த தொகுப்பாளர் விடவே இல்லை.

கடைசியாக நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் அது நயன்தாரா. என்ற பதிலை கூறினார். அதை அனிருத்தும் உறுதி செய்ததை அடுத்து அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)