Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆண்டாள் முன் வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் – மயிலாப்பூரில் போராட்டம்!

In இந்தியா
Published: 07:20 GMT, Jan 13, 2018 |
0 Comments
1133
icon_com
This post was written by : Arul Jesu
download (1)

ஆண்டாளைப் பற்றித் தவறாக பேசிய கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்துப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி மயிலை மாங்கொல்லையில் ஆயிரக்கணக்கான பிரமாணர்கள் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவராகப் போற்றப்படும் ‘ஆண்டாள்’ குறித்து கவிஞர் வைரமுத்து சில நாட்களுக்கு முன்னர் ‘ஆண்டாள்’ பற்றிய நிகழ்வொன்றில்  சில கருத்துகளைக் கூறியிருந்தார். அந்த கருத்து இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து மாங்கொல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அந்தவகையில் சங்கத்தின் மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மயிலாப்பூர் கிளைத் தலைவர் ஜி.ராஜேஷ் நாராயணன், மந்தைவெளி கிளை தலைவர் கே.ஆர்.ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அத்துடன் விசுவ இந்து பரி‌ஷத் தலைவர் வேதாந்தம் ஜி, நடிகர் எஸ்.வி.சேகர், பாரதியார் மக்கள் கட்சி தலைவர் மயிலை சத்யா உள்ளிட்ட ஏராளமான பிராமண பெண்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது,  ஆண்டாள் கோவில் சந்நிதியில் கவிஞர் வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)