Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆபத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம்! – இயல்பாக ஏற்படுவதை தடுக்க வேண்டாம்!

In
Updated: 12:59 GMT, Jan 27, 2018 | Published: 12:59 GMT, Jan 27, 2018 |
0 Comments
1057
This post was written by : Puvanes

பொது இடத்தில் சத்தமாக தும்முவதை அநாகரீகமானச் செயல் என பலர் கூறுவார்கள். அப்படியாக ஒருவர் தும்மிவிட்டால் “அடச்சீ என்ன நாகரீகமற்ற செயல், பொது இடத்தில் எப்படி இருக்கவேண்டும் என அறியாதவர்கள்” என்ற வார்த்தைகள் பரிகாசமாகக் கிடைக்கும்.

நிற்க ஒரு சம்பவப் பதிவு, “அலுவலகம் பரபரப்பான கூட்டம் ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அங்கிருந்த இளைஞன் ஒருவனுக்கு தும்மல் ஏற்பட்டுள்ளது. எனினும் அநாகரீகமாக மாறிவிடும் என்ற காரணத்தினால் அவர் தன் மூக்கினையும் வாயையும் ஒரே தடவையில் மூடியுள்ளார்.

அதன்பின்னர் சற்று நேரத்தில் அவருக்கு தொடர் இருமல் வாந்தி போன்றவை ஏற்பட்டுள்ளது. மருத்துவனையின் அவர் அனுமதிக்கப்பட்ட பின்னர் தும்மலை பலவந்தமாக அடக்கியதால் அவருக்கு தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டு பிடித்து என்னபயன் அவருக்கு அதன்பின்னர் குரலும் பறிபோன சம்பவம் கூட பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல அமெரிக்க மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் போது தும்மலை அடக்கும்போது காதுமடல் கிழிவடையும் அபாயம் ஏற்படலாம் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே தும்மல் இயற்கையான ஒன்று அதனை தடுப்பது ஆபத்தை ஏற்படுத்தும் அதனால் தும்மலை தடுக்கவேண்டாம். தும்மல் அநாகரீகம் என்று சொல்பவர்களுக்கும் தெளிவாகச் செல்லிவிடுங்கள் “தும்மல் இருமல் விக்கல் பிறப்பு இறப்பு…. போன்றன இயல்பாகவே ஏற்படும் வந்தாலும் தடுக்கமுடியாது தடுத்தாலும் ஆபத்துதான் என்பதை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg