Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா.வின் அரசியல் செயலர் இலங்கைக்கு முக்கிய விஜயம்

In இலங்கை
Updated: 02:23 GMT, Mar 7, 2018 | Published: 02:23 GMT, Mar 7, 2018 |
0 Comments
1274
This post was written by : Litharsan

ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.

எதிர்வரும் 11ஆம் திகதி வரை இலங்கையில் தங்கவுள்ள அவர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும், மூத்த அதிகாரிகளையும், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையிலும், அவசரகாலச்சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், ஐ.நா. உதவிச்செயலரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

எனினும், இந்தப் பயணம் அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னரே திட்டமிடப்பட்டது என்பதுடன், இலங்கைக்கும் ஐ.நா.வுக்கும் இடையில் தொடர்கின்ற ஒத்துழைப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg