Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புருவ அழகிகளுக்காக சில டிப்ஸ்…

In
Updated: 13:30 GMT, Mar 10, 2018 | Published: 13:30 GMT, Mar 10, 2018 |
0 Comments
1066
This post was written by : Puvanes

பெண்களின் முகப்பொழிவை மேலும் அதிகரித்துக் காட்டுவதில் புருவம் முக்கிய பங்களிப்பினைச் செய்து வருகின்றது. அதற்காகவே வாரம் ஒரு முறை பெண்கள் புருவ அழகிற்காக நேரத்தை ஒதுக்குகின்றனர்.

புருவத்தின் அழகு என்பது பெண்ணில் அழகை மேலும் எழுப்பாக்கி விடும். அதற்கான சில வழிமுறைகளைப் பார்க்கலாம்…

புருவம் இலேசாக மேலேற வெளிப்புறம் கொஞ்சமாகவே கீழிறங்க வேண்டும். பார்ப்பதற்கு, தூரத்தில் பறக்கும் பறவை மாதிரி இருக்கும். வெளிப்புறமாக இருக்கும் தேவையற்ற முடியை அகற்றி விடுங்கள். முடியுமிடத்தில் மிகவும் மெலிதாக இருக்கட்டும்.

சதுர முகம் – புருவ வளைவு அகன்று இருக்க வேண்டும். புருவ முடிகளின் வரிசையில் உள்பக்கமாக இருப்பவற்றைத்தான் அகற்ற வேண்டும். அதுதான் முகத்தின் சதுரத் தன்மையைத் குறைத்துக் காட்டும்.

வட்ட முகம் – புருவம் மிகவும் நீளம் குறைந்ததாய் இருக்க வேண்டும். பருமனாக ஆரம்பித்து, அடுத்தடுத்துக் குறுகிக் கொண்டே இருக்க வேண்டும். வெளிப்புற முடிவில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி விடுங்கள்.

நீளமான முகம் – எவ்வளவுக்கெவ்வளவு நேராக, வளையாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது. புருவத்தின் ஓரத்தில் மட்டும் மிகச்சிறு அளவு வளைந்து விடுங்கள்.

புருவம் தீட்டப் பொதுவாக ஐப்ரோ பென்சில்களைப் பயன்படுத்துவதே நல்லது. விரல் நுனியில் மை தொட்டு இழுக்கும் பழக்கத்தைத் தவிர்த்துவிடவும். ஐப்ரோ பென்சிலை எவ்வளவு மெல்லியதாக முடியுமோ அவ்வளவு மெல்லியதாகப் பயன்படுத்தவும்.

உட்புறமிருந்து வெளிப்புறமாகத்தான் பென்சிலால் புருவம் தீட்ட வேண்டும். ஒவ்வோர் இழையாக இட, இப் புருவம் பொழிவு பெறும். அழுத்தமான தடித்த கோடுகள் ‘செயற்கை’ என்று காட்டிக் கொடுத்து அழகை வெற்றிடமாக்கிவிடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg