Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அருண்ஜெட்லியின் மகள் மீது ராகுல் குற்றச்சாட்டு

In இந்தியா
Updated: 17:18 GMT, Mar 13, 2018 | Published: 05:30 GMT, Mar 13, 2018 |
0 Comments
1153
This post was written by : Kemasiya

பஞ்சாப் நெஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் அருண்ஜெட்லியின் மகள் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பஞ்சாப் நெஷனல் வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பணமோசடி தொடர்பில் பா.ஜ.க. மீதும் அருண்ஜெட்லி மீதும் கடும் விமர்சனங்களை தொடர்ந்தும் டுவிட்டரில் பதிவிட்டு வரும் ராகுல், நேற்று (திங்கட்கிழமை) பதிவிட்ட டுவிட்டர் பதிவில் அருண்ஜெட்லியின் மகள்மீதும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

“வங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அருண்ஜெட்லியின் மகளான சட்டத்தரணி, தனது சட்ட நிறுவனத்தின் பணிக்காக பெருந்தொகை பணத்தைப் பெற்றுள்ளார். இதனாலேயே வங்கி மோசடி விவகாரத்தில் நிதி அமைச்சர் மௌனம் காத்து வருகின்றார்.

சட்ட நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. சோதனை நடத்துகின்றது. அவ்வாறிருக்கையில் ஏன் அருண்ஜெட்லியின் மகளின் சட்ட நிறுவனத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தக் கூடாது?’ என தனது டுவிட்டர் பதிவில் பகிரங்கமான குற்றச்சாட்டை ராகுல் முன்வைத்துள்ளார்.

பஞ்சாப் நெஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி வரையில் மோசடி இடம்பெற்றுள்ளமையும் குறித்த மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்தாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg