Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காவிரி பிரச்சினையை தீர்க்க தி.மு.க. என்ன செய்தது? – ஜெயக்குமார்

In இந்தியா
Updated: 06:31 GMT, Mar 22, 2018 | Published: 05:31 GMT, Mar 22, 2018 |
0 Comments
1084
This post was written by : Kemasiya

தி.மு.க. தன்னுடைய 17 வருடகால ஆட்சியில் காவிரி நீர் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலத்தில்தான் தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. காவிரி நீர் விவகாரத்தை கையிலெடுத்து முற்றுப்புள்ளி வைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அம்மா வகுத்துவிட்டு சென்றார்.

தி.மு.க.வினர் தமது ஆட்சிக்காலத்தில் மத்திய ஆட்சியினரோடு கூட்டணி வகித்து வந்தனர். அவர்கள் நினைத்திருந்தால் காவிரி பிரச்சினைக்கு அப்பொழுதே தீர்வு கண்டிருக்க முடியும்.

ஆனால் பழத்தை உண்டுவிட்டு தோலை மக்களுக்கு வீசிய அவர்களால் மக்களுக்காக எதையும் செய்யமுடியவில்லை” என ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg