Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காட்டுமிராண்டித்தனமான சிரிய தாக்குதலுக்கு தெரேசா மே கண்டனம்

In
Updated: 07:27 GMT, Apr 10, 2018 | Published: 06:08 GMT, Apr 10, 2018 |
0 Comments
1217
This post was written by : Risha

சிரியாவில் இடம்பெற்ற காட்டுமிராண்டித்தனமான இரசாயன ஆயுத தாக்குதலை பிரதமர் தெரேசா மே வன்மையாக கண்டித்துள்ளார்.

டென்மார்க்கில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மே, ”சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியின் கொடூரத்தின் மற்றொரு உதாரணமாக இந்த தாக்குதல் உறுதிப்படுத்தப்படுமாயின், சிரிய அரசாங்கமும் அதன் ஆதரவாளரான ரஷ்யாவும் பொறுப்பு கூற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

சிரிய தாக்குதல் தொடர்பாக அவசரமாக ஆராயப்பட்டு வருவதுடன், முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சிரியாவில் இரசாயன ஆயுத பயன்பாட்டை எதிர்த்து நாம் போராட வேண்டும். அதற்கு சர்வதேச சமூகம் வலுப்பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஆனால் சிரியாவில் நடத்தப்பட்டது ஒரு இரசாயன ஆயுத தாக்குதல் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்காவும், பிரான்ஸும் கூட்டாக அச்சுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg