Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் இனத்திற்கு நீதி கோரி திருகோணமலையில் அஞ்சலி!

In இலங்கை
Updated: 05:51 GMT, May 17, 2018 | Published: 05:51 GMT, May 17, 2018 |
0 Comments
1092
This post was written by : Risha

தமிழ் இனத்திற்கு சர்வதேச விசாரணை பொறிமுறை ஊடான நீதியை வலியுறுத்தி, இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடைத் தியாகிகள் மண்டபத்திற்கு முன்பாக நேற்று (புதன்கிழமை) குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, தமிழ் இனத்திற்கு சர்வதேச விசாரணை பொறிமுறையினூடாக நீதி கிடைக்கவேண்டும் என சர்வதேசத்திற்கு வேண்டுகோள் விடுக்கும்முகமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ் அஞ்சலி நிகழ்வில், வட. மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி உட்பட பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)