Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

In இலங்கை
Updated: 10:11 GMT, May 18, 2018 | Published: 10:11 GMT, May 18, 2018 |
0 Comments
1033
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் உட்பட நான்கு பேர் மீது மட்டக்களப்பு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பான வழக்கு இன்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த், அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தன்னான ஞானரத்ன தேரர் உட்பட நான்கு பேரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போதே நீதிபதி இந்த வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார்.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தின்போது மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்களின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள், அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் 2017ஆம்ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)