Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனவாதியாக காட்டுவதற்கு முயற்சி நடக்கின்றது: ரிஷாட் குற்றச்சாட்டு

In இலங்கை
Updated: 08:44 GMT, May 21, 2018 | Published: 08:44 GMT, May 21, 2018 |
0 Comments
1147
This post was written by : Jeyachandran Vithushan

சிங்கள மக்கள் மத்தியில் தம்மை ஒரு இனவாதியாக காட்டுவதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கண்டி, பானகமுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் நேற்று (ஞாயிறுக்கிழமை) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அடக்கி ஒடுக்கப்படும் சமூகத்திற்கு நடக்கின்ற அநீதிகளை தட்டி கேட்பதாலும், நியாயத்தை பேசுவதாலும் தான் எங்களை விரோதியாக அவர்கள் பார்ப்பதாக அவர் கூறினார்.

அதுமட்டுமன்றி, சொந்த இடங்களில் மக்களை கொண்டு சென்று குடியேற்றும் எங்களை, வில்பத்து காட்டினை அழித்து விட்டு குடியேற்றுவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு செய்யாத தவறை சிங்கள ஊடகங்கள் மூலம் கூறி எங்களை சிங்கள மக்கள் முன்னிலையில் குற்றவாளிகளாக சித்தரிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg