Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி!

In இந்தியா
Updated: 15:57 GMT, May 25, 2018 | Published: 15:57 GMT, May 25, 2018 |
0 Comments
1067
This post was written by : Ravivarman

தூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கென இலவச சட்ட உதவி மையம் செயற்பட்டு வருவதாக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

மேலும் மாவட்ட நீதிமன்ற வளாகம் மற்றும் அரச மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் குறித்த இலவச சட்ட உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த மையங்கள் மூலமாக சிறையிலிருப்பவர்களைப் பிணையில் எடுத்தல், பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அரசு அறிவித்துள்ள இழப்பீடுகளைப் பெறுதல் போன்ற சட்டரீதியிலான உதவிகளை மக்கள் பெற்றுக் கொள்ளமுடியுமென மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக இலவசமாக வாதிடுவதற்கும் குறித்த மையங்கள் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg