Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் குழப்பங்களை பிரதமர் வேடிக்கை பார்க்கிறார்: ராகுல்

In இந்தியா
Updated: 03:05 GMT, Jun 19, 2018 | Published: 03:05 GMT, Jun 19, 2018 |
0 Comments
1050
This post was written by : Elakkiya

டெல்லியில் நடைபெறும் அரசியல் குழப்பங்களை பிரதமர் மோடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் பல்வேறு தரப்பினரின் போராட்டங்கள் குறித்து தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“டெல்லி முதல் அமைச்சர், ஆளுநர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துகிறார். பாரதிய ஜனதா கட்சியினர், முதலமைச்சர் வீட்டுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மறுபுறத்தில் போராட்டம்  நடத்துகின்றனர். இவ்வாறு டெல்லியில் நடக்கும் இந்த நாடகங்களை பிரதமர் மோடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இத்தகைய அரசியல் குழப்பத்தை பிரதமர் தலையிட்டு தீர்த்து வைக்காததால் மக்களே பாதிக்கப்படுகின்றனர். இது கவலை அளிக்கின்றது” என்று டுவிட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg