Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் தீர்மானத்தை கைவிடவில்லை: எர்டோகன்

In ஐரோப்பா
Updated: 09:48 GMT, Nov 30, 2016 | Published: 05:53 GMT, Nov 30, 2016 |
0 Comments
1215
This post was written by : Elakkiya

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதான தீர்மானத்தை துருக்கி இன்னமும் கைவிட்டுவிடவில்லை என துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை கைவிட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் பரிந்துரை செய்திருந்த நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) தயீப் எர்டோகன் இத்தகைய கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அங்காரா எப்போதும் பெருமளவான மாற்று வழிகளை கொண்டிருக்கும் என்றும் எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ ஐரோப்பிய ஒன்றியம் எங்களை அவமானப்படுத்துவதை பார்க்கும் போது வேதனை அடைகின்றோம். இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதான தீர்மானத்தை கைவிடவில்லை. ‘ என்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கியை இணைத்துக் கொள்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியது எனினும் கடந்த ஜூலை மாதம் துருக்கியில் தோல்விகண்ட இராணுவ சதிப்புரட்சியை அடுத்த துருக்கி அரசின் பொருத்தமற்ற செயற்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை கவலையடைச் செய்துள்ளது.

இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கியை இணைத்துக் கொள்வது குறித்த பேச்சுவார்த்தையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான அவசியம் துருக்கிக்கு இல்லை என்றும் சீனா, ரஷ்யா மற்றும் மத்திய அசிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சேர்வது குறித்து யோசிப்பதாகவும் கடந்த வாரம் எர்டோகன் கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg