Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரொக்கெட் ஏவப்படுவதை 360 பாகை கோணத்தில் நேரலையில் காண்பிக்க திட்டம்: நாசாவின் புதிய முயற்சி

In தொழில்நுட்பம்
Updated: 12:00 GMT, Apr 18, 2017 | Published: 10:59 GMT, Apr 18, 2017 |
0 Comments
1158
This post was written by : Elakkiya

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஒர்பிட்டல் ATK மற்றும் யுனைட்டெட் லோன்ச் அலையன்ஸ் உள்ளிட்ட (United Launch Alliance) நிறுவனங்கள் இணைந்து உலகில் முதன்முறையாக 360 பாகை கோணத்திலான வீடியோவினை நேரலையில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளன.

அதற்கேற்ப சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குகளை அனுப்பும் ரொக்கெட் ஒன்று இன்று உள்ளூர் நேரப்படி காலை 11.11 மணியளவில் (இலங்கை நேரம் 8.41 pm) ஏவப்படவுள்ள நிலையில் அதனை நேரலையில் ஒளிபரப்புவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

குறித்த ரொக்கெட்டை விண்வெளியில் அனுப்புவதற்கு பத்து நிமிடங்கள் முன்னதாக நாசாவின் தொலைக்காட்சி சேவையூடாக நேரலை ஆரம்பிக்கப்படும். நாசாவின் தொலைக்காட்சி சேவையினை யூ-ரியூப் ஊடாக பொதுமக்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஒர்பிட்டலின் ATK சிக்னஸ் விண்கலத்தை சுமந்து செல்லும் அட்லஸ் V ரொக்கெட் அறிவியல் ஆய்வு குழுவினருக்கான சுமார் 3,447 கிலோவுக்கும் அதிகமான எடைகொண்ட விநியோக பொருட்கள் மற்றும் வன்பொருள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்கிறது.

யூ-ரியூப் தளத்தில் 360 டிகிரி வீடியோக்களை கணனிகளில் கூகுள் குரோம், ஃபயர்பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் ஒபேரா உள்ளிட்ட இணைய உலாவிகளில் பார்க்க முடியும். இதுதவிர யூ-ரியூப் செயலியில் ஸ்மார்ட்போன்களிலும் பார்க்க முடியும்.

விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களை வைத்திருப்போர் நேரலை வீடியோக்களை ஏவுதளத்தில் இருந்து பார்ப்பதை போன்ற அனுபவம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg