Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டேனி செபாலோஸை விலைக்கு வாங்க பார்சிலோனா மற்றும் ரியல் மெட்ரிட் அணிகள் மும்முரம்

In உதைப்பந்தாட்டம்
Updated: 11:50 GMT, Jul 5, 2017 | Published: 09:31 GMT, Jul 5, 2017 |
0 Comments
1400
icon_com
This post was written by : Surenth
Dani Ceballos

ரியல் பெடிஸ் அணிக்காக விளையாடிவரும் டேனி செபாலோஸை தமது அணிக்குள் உள்வாங்குவதற்கு பார்சிலோனா மற்றும் ரியல் மெட்ரிட்  அணிகள் மும்முரம் காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

21 வயதிற்குட்பட்டோருக்கான சம்பியன்ஷிப் தொடரில், நடுக்கள வீரராக களம் இறங்கிய டேனி சிறப்பாக விளையாடிய நிலையில், அவரை தமது அணிக்குள் உள்வாங்க இரு அணிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

பார்சிலோனா அணியில் மெஸ்சி, நெய்மர், சுவாரஸ் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடும் அதேவேளை, ரியல் மெட்ரிட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மார்சிலோ, க்ரூஸ், கேஸ்மிரோ, பென்சிமா, பேலே போன்ற வீரர்கள் விளையாடிவருகின்றனர்.

இந்த நிலையில், டேனியை உள்வாங்குவதற்காக ரியல் பெடிஸ் அணியிடம் 12 மில்லியன் பவுண்ட்ஸுக்கு ரியல் மெட்ரிட் அணி விலை பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பார்சிலோனா அணியும் டேனி செபாலோஸ் குறித்து ரியல் பெடிஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg