Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொண்டர்களுக்காக கட்சியும் மக்களுக்காக ஆட்சியும் என்பதே அ.தி.மு.க. அம்மா அணியின் திட்டம்: செம்மலை

In இந்தியா
Updated: 07:30 GMT, Jul 8, 2017 | Published: 07:30 GMT, Jul 8, 2017 |
0 Comments
1282
This post was written by : Surenth

தொண்டர்களுக்காக கட்சியும், மக்களுக்காக ஆட்சியும் என்ற அடிப்படையில் தூய்மையான அரசு அமைய வேண்டும் என்பதே அ.தி.மு.க. அம்மா அணியின் திட்டம் என சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் இன்று (சனிக்கிழமை) வழங்கிய விஷேட செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க. அம்மா அணி, தொண்டர்களின் இயக்கமாக தொடர வேண்டும் எனவும் ஆட்சி என்பது மக்கள் விரும்புகிற வகையில் மக்களாட்சியாக இருக்க வேண்டும் எனவும் தங்கள் அணி தலைமை ஏற்றால் அந்த நல்லாட்சியை கொடுப்போம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், தங்கள் அணியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்கள் அணியில் தொடருவதில் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது அணிக்குள் எந்த தடுமாற்றமும் இல்லை என்றும் ஒரு சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி தமது அணியை குழப்ப முயற்சிப்பதாகவும் செம்மலை குற்றம் சாட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg