Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலியல் வன்முறைக்கு உள்ளான நடிகையின் பெயரை வெளியிட்ட கமலுக்கு மன்னிப்பு கோர வலியுறுத்து!

In சினிமா
Updated: 06:06 GMT, Jul 15, 2017 | Published: 06:06 GMT, Jul 15, 2017 |
0 Comments
1561
This post was written by : Surenth

பாலியல் வன்முறைக்கு உள்ளான நடிகையின் பெயரை கமல் ஹாசன் வெளியிட்டமைக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இது குறித்து, அவர் வெளியிட்ட கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் தேசிய பெண்கள் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னையில் பேட்டி ஒன்றை வழங்கிய கமல் ஹாசன் கேரளாவில் காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் பெயரை குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய பெண்கள் ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “இலட்சக்கணக்கான இரசிகர்களை கொண்ட கமல் ஹாசன் இதுபோன்று செயல்படுவது, தவறான முன்மாதிரியாக இருந்து விடும். பாதிக்கப்பட்ட நடிகையோ அல்லது இரசிகர்களோ அவர் மீது வழக்கு தொடர முடியும். எனவே, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, நடிகர் கமல் ஹாசன் “நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நான் கேட்பேன். சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை. பெண்களை நேசிப்பவனும், அவர்களின் உரிமைக்காகவும் போராடுபவன் நான். நான் யாருக்காகவும் வளைந்து கொடுப்பவன் அல்ல. குற்றவாளிகளை விட்டுவிட்டு சட்டத்தரணியை தண்டிப்பது போல் உள்ளது.” என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg