Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாடலாசிரியர் விருதுகளில் இருட்டடிப்பு: பா.விஜய் அதிருப்தி

In சினிமா
Updated: 11:13 GMT, Jul 18, 2017 | Published: 11:13 GMT, Jul 18, 2017 |
0 Comments
1416
This post was written by : Risha

தமிழக அரசினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட 2009- 2014ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்பட விருதுகளில், பாடலாசிரியர்களுக்கான விருதுகளில் இருட்டடிப்பு நிகழ்ந்துள்ளதாக கவிஞர் பா.விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

தனக்கும், கவிஞர் வைரமுத்துவிற்கும் ஒரு விருதேனும் அறிவிக்கப்படாத நிலையிலேயே அவர் இவ்வாறு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், இந்த ஆறு வருட விருதுகளில் எனக்கும், வைரமுத்துவிற்கும் ஒரு விருது கூட அறிவிக்கப்படவில்லை. இந்த ஆறு வருடங்களில் நாம் ஒரு விருதிற்குரிய பாடலைக் கூடவா எழுதவில்லை? எனக் கேள்வி எழுப்பி விருதுக் குழுவினரை சாடியுள்ளார்.

தமிழக அரசின் குறித்த விருது பெற்ற கலைஞர்கள் அரசிற்கு நன்றி பாராட்டிவரும் அதேவேளை, விருது கிடைக்காத பலரும் இவ்வாறு தமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg