Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலில் போட்டியிட 420 பேருக்கு தடை!

In இலங்கை
Published: 06:46 GMT, Sep 3, 2017 |
0 Comments
1346
This post was written by : Varshini
ballot_box

அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தேர்தல் திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை 420 பேர் இழந்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கே இந் நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்தச் சட்டத்தில், அரச சேவையில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு அமைவாகவே குறித்த உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இச் சட்டமூலமானது, அரச ஊழியர்களின் உரிமையை பாதிப்பதாக அமைகின்றதென ஒன்றிணைந்த எதிரணியும், பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கடந்த அமர்வில் நாடாளுமன்றில எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg