Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நான் மக்களுக்காக உழைக்கும் ஒரு கருவி: கமல்ஹாசன்

In இந்தியா
Published: 10:10 GMT, Sep 22, 2017 |
0 Comments
1143
icon_com
This post was written by : Kemasiya
fgfr

அரசியலுக்குள் நுழைவதென்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது. மக்களைப் பொறுத்தவரை அவர்களின் பிரச்சினைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) டெல்லி முதல்வர் அரவிந் கேஜ்ரிவாலை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்னும் நூறு நாட்களில் தேர்தல் நடைபெறுமானால் நான் களத்தில் நிற்பேன், அரசியலுக்கு வந்தால் எனக்கும் ரஜனிக்கும் உள்ள ஒரே குறிக்கோள் ஊழலை ஒழிப்பது என கூறியுள்ளார்.

மேலும் அரசியல் ஒரு புதைகுளி என்பதை மாற்றி எல்லோருக்குமானது என மாற்றுவதே இப்போதைய தேவையாகவுள்ளது. அத்துடன் மக்களின் ஒத்துழைப்பின்றி எதையும் செயற்படுத்த முடியாது. நான் ஒரு பகுத்தறிவாளன். கடவுள் இருக்கின்றாரோ, இல்லையோ என்பதை விட மக்களின் அன்பை மதிக்கின்றவன்.

மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமென்றாளும் கீழ் இறங்கிச் செல்ல தயாராகவுள்ளேன்.  நான் மக்களுக்காக உதவும் ஒரு கருவி, அதைத் தவிர வேறொன்றும் இல்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg