Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய சுற்றுலாப்பயணி கோயில் வாசலில் யாசகம்

In இந்தியா
Updated: 16:38 GMT, Oct 10, 2017 | Published: 16:38 GMT, Oct 10, 2017 |
0 Comments
1750
icon_com
This post was written by : Sivaguru Siva
Kanchi

தமிழகத்திலுள்ள காஞ்சிபுரம், குமரக்கோட்டம் கோயில் முன்றலில் ரஷ்ய சுற்றுலாப்பயணி ஒருவர் இன்று யாசகம் கோரிய சம்பவம் கோவிலுக்கு சென்ற மக்களுக்கு அதிர்ச்சியளித்தது.

கடந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுலாப்பயணியாக சென்ற இவர் இன்று காலை காஞ்சிபுரத்துக்கு சென்று அங்குள்ள கோயில்களைப் பார்வையிட்டார்.

அதன் பின்னர் குமரக்கோட்டம் கோயிலுக்கு அருகிலுள்ள தானியங்கி பண இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றபோது அவரது வங்கி அட்டையின் கடவு எண் திடீரென பூட்டப்பட்டுவிட்டது ( பின் லொக்)

இதனால் கையில் பணம் இல்லாமல் தவித்த அவர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் யாசகம் கோர அமர்ந்து விட்டார்.

இந்த நிலையில் ரஷ்ய சுற்றுலாப்பயணி ஒருவர் யாசகம் கோருவதாக சம்பவம் காவற்துறைக்கு சென்றதும் அங்கு சென்ற காவற்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரது பயண ஆவணங்களைச் சரிபார்த்தனர்.

இறுதியில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அவரது சென்னைப் பயணத்துக்கு பணம் வழங்கி அனுப்பியும் வைத்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg