Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனித குலத்தை கட்டுப்படுத்தும் அபாயகரமானதோர் திட்டம் அம்பலமானது!

In அறிவியல்
Published: 09:46 GMT, Dec 5, 2017 |
0 Comments
1853
icon_com
This post was written by : Puvanes
tele001

ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் ஆபத்தானதோர் திட்டம் தற்போது மறைமுகமாக அரங்கேற்றப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அறிவியல் உலகில் காட்சிகள் அதாவது தொலைக்காட்சி மற்றும் சினிமா போன்றவற்றின் ஊடாக மனிதகுலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது என ஒருசில ஆய்வாளர்கள் வாதங்களை முன்வைத்து வந்தனர்.

எனினும் இதனை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை பொழுதுபோக்கு சாதனங்கள் ஊடாக இத்தகைய செயற்பாட்டினைச் செய்யமுடியாது என எதிர்வாதங்களை முன்வைத்து வந்தனர்.

இந்தநிலையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமையினை வழங்கிவரும் கூகுள் தளத்தின் ஒரு பிரிவு மூலம் அபாயகரமான விடயம் தொடர்பாக அம்பலமாகியுள்ளது.

பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் மூலம் மின்காந்த அலைவரிசை ஊடாக நரம்பியல் மண்டலங்களை கட்டுப்படுத்த முடியும் என்ற கண்டுபிடிப்பினை உலகறியச் செய்துள்ளார்.

Nervous system manipulation by electromagnetic fields from monitors எனப்படும் இந்த கண்டுபிடிப்பிற்கு US 6506148 B2 என்ற காப்புரிமை இலக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. (இது தொடர்பில் முழு விபரத்தினையும் www.google.com/patents/US6506148 என்ற தளத்தில் அறிந்து கொள்ளலாம்)

இந்த கண்டுபிடிப்பின்படி காட்சி வடிவமைப்புகள் மற்றும் ஒலி, ஒளியினூடாக மனிதர்களை கட்டுப்படுத்த முடியும். மின்காந்த அலைவரிசைகளினால் மனிதனின் மூளையைக்கட்டுப்படுத்தி அவர்களின் செயற்பாடுகளை நிர்ணயித்துக் கொள்ளமுடியும் எனவும் அறியப்பட்டுள்ளது.

இதனை ஆய்வுசெய்தவர்கள் இதன் மூலம் சிந்தனைகளை கட்டுப்படுத்தி மனிதர்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர். ஒருவகையில் தற்போது இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் இதன் ஊடாக மனித குலம் கட்டுப்படுத்தப்படும் எனக் கூறப்படுவதோடு, காட்சி வடிவமைப்பின் ஊடாக மனிதர்களின் எண்ணங்களை மாற்றியமைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 1950களிக் அமெரிக்க CIA வானது Project MKUltra என்ற ஓர் திட்டத்தினை கொண்டுவந்தது அதுவும் மனிதர்களை கட்டுப்படுத்தும் திட்டமே எனினும் இது தொடர்பான செய்திகள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)