Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணிப்பகிஷ்கரிப்பால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் முடக்கம்!

In இலங்கை
Published: 06:53 GMT, Dec 8, 2017 |
0 Comments
1086
icon_com
This post was written by : Ravivarman

ரயில் சேவையாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மலையத்திற்கான 16 ரயில்சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக ரயில்நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேலும் குறித்த வேலை நிறுத்தம் காரணமாக தபால் சேவைகள் ஓரளவு தாமதமாகியுள்ளதுடன், வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக இருந்த தபால் பொதிகள் வான் மூலம் அனுப்பப்பட்டுள்ளதனால் தபால் திணைக்களத்திற்கு அதிக பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் பலசிரமங்களுக்கு  முகம்கொடுத்துள்ளதுடன், எதிர்வரும் 12 ம் திகதி க.பொ.த சாதாரணதர பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளநிலையில் ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளதால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பாரிய அளவில் பாதிக்கப்படலாம் எனப் பலரும் தெரிவிக்கின்றனர்.

Train (7) Train (5) Train (4)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)