Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தி.மு.க. தலைவரை இன்று சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

In இந்தியா
Published: 04:34 GMT, Jan 3, 2018 |
0 Comments
1163
This post was written by : Risha
201801030912468131_actor-Rajinikanth-meets--DMK-leader-Karunanidhi-today_SECVPF

அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், இன்று (புதன்கிழமை) மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது அரசியல் சார்ந்த சந்திப்பு இல்லை என்றும் கருணாநிதியிடம் நலம் விசாரிக்கும் வகையிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் நடைபெறவுள்ள குறித்த சந்திப்பின்போது தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க.வின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் உறுதிசெய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலான இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களின் 20 ஆண்டுகால எதிர்பார்ப்பான அரசியல் பிரவேசத்தை கடந்த 31ஆம் திகதி அறிவித்தார். அதன்படி, எதிர்வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் ரஜினிகாந்தின் கட்சி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg