Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மன் அதிபர் – பிரித்தானியப் பிரதமர் சந்திப்பு!

In
Updated: 10:25 GMT, Feb 14, 2018 | Published: 10:25 GMT, Feb 14, 2018 |
0 Comments
1094
This post was written by : Suganthini

பிரெக்சிற் தொடர்பாக, ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கலுடன் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார்.

ஜேர்மனிக்கு நாளைமறுதினம் (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்யவுள்ள பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, ஜேர்மன் அதிபரை பேர்லினில் சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையிலிருந்து பிரித்தானியா வெளியேறவுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சுமூகமான இடைமாற்றுக்கால உடன்பாட்டை எட்ட பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே எதிர்பார்த்துள்ளார்.

பிரெக்சிற் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் நிலவினால், இடைமாற்றுக்கால ஒப்பந்தத்தை எட்டுவதில் சிக்கல் காணப்படுமென, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற்றுக்கான பிரதான பேச்சாளர் மைக்கல் பார்னியர் கடந்த வாரம் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே, சுமூகமான இடைமாற்றுக்கால உடன்பாட்டை எட்ட பிரித்தானியப் பிரதமர் எதிர்பார்த்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)