Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்!

In
Updated: 11:48 GMT, Feb 20, 2018 | Published: 11:48 GMT, Feb 20, 2018 |
0 Comments
1301
This post was written by : Varothayan

பல தசாப்த இடைவெளிக்குப் பின்னர் முழுக்க முழுக்க இலங்கை கலைஞர்களின் தயாரிப்பில் வெளிவரும் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள தமிழ்த் திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாடெங்கும் திரையிடப்பட உள்ளது.

வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தலைநகர் கொழும்பு உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இத்திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளது.

இலங்கை உட்பட உலகெங்கும் பரந்து வாழும் சகல தமிழ் சினிமா ரசிகர்களுக்காக, சகலரும் குடும்பத்துடன் சென்று பார்த்து இரசித்து மகிழக்கூடிய ஒரு பொழுதுபோக்கு சித்திரமாக ‘கோமாளி கிங்ஸ்’ தயாரிக்கப்பட்டுள்ளது.

1 (1) 1 (20) 1 (25)

நகைச்சுவை, காதல், அதிரடி, த்ரில், சஸ்பென்ஸ் என படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கதையோடும் காட்சிகளோடும் ஒன்றிக்க வைக்கும் வகையில் இத்திரைப்படத்தின் கதைக்கரு வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘கோமாளி கிங்ஸ்’ இன் வரவு இலங்கை தமிழ்த் திரைப்படத் துறையின் புனர்ஜென்மம் என்றுகூட அழைக்கப்படலாம்.

‘கோமாளி கிங்ஸ்’ திரைப்படத்திலுள்ள இன்னுமொரு சிறப்பம்சம் யாதெனில், இலங்கையில் பயன்படுத்தப்படும் பல்வேறு தமிழ் மொழி வழக்குகளை இத்திரைப்படத்தின் பாத்திரங்கள் பேசி நடிக்கின்றனர்.

இலங்கையின் தனித்துவமான தமிழ் மொழிப் பாவனைக்கு திரைப்படம் முக்கிய இடத்தை வழங்கியுள்ளது. இதனால் இலங்கையின் சகல தமிழ் பேசும் பார்வையாளர்களும் மெய்மறந்து, ரசித்து இத்திரைப்படத்தோடு ஒன்றிப் போவார்கள் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

தரமான கதைக்கரு, சிறந்த நடிப்புத் திறமை, ரசிகர்கள் மனதில் நிற்கும் பாடல் வரிகளும் இசையும் மற்றும் மிக நேர்த்தியான நெறியாள்கையும், தயாரிப்பும் கலந்து, இலங்கை கலைஞர்களும் உலகத் தரத்திலான சினிமாவை படைக்க வல்லவர்கள் தான் என்பதை இத்திரைப்படம் நிரூபித்துள்ளது.

1 (26) 1 (28) 1 (29)

‘கோமாளி கிங்ஸ்’ திரைப்படத்தின் கதை, திரைக்கதை நெறியாள்கையை என்பவற்றை கிங் ரட்ணம் கையாண்டிருக்கின்றார். மேலும் இலங்கையின் மூத்த கலைஞர்களான கலாபூசனம் ராஜா கணேசன், மற்றும் புகழ் பெற்ற நடிகர்களான தர்ஷன் தர்மராஜ், நிரஞ்சனி சண்முகராஜா, கஜன் கணேசன் ஆகியோருடன் இயக்குனர் கிங் ரட்ணமும் ஒரு பிரதான பாத்திரத்தை ஏற்று இத்திரைப்படத்தின் கதையோட்டத்திற்கு உயிர ஏற்றியுள்ளனர்.

‘கோமாளி கிங்ஸ்’ பல தயாரிப்பாளர்களை உள்ளடக்கிய ஒரு குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை ‘Picture This’ தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து Arokya International, M-Entertainment, மற்றும் Wine Creative Networks தயாரித்து வழங்குகின்றது.

இத்தயாரிப்புக் குழுவிற்கு ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. கணேஷ் தெய்வநாயகமும், சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவரும் வழக்கறிஞருமான திரு. செல்வஸ்கந்தனும் தலைமை தாங்குகின்றனர். மற்றும் திருமதி. தாரணி ராஜசிங்கமும் இத்திரைப்படத்தின் ஒரு பிரதான தயாரிப்பாளராவார்.

1 (31) 1 (32) 1 (33)

இலங்கையின் புகழ்பெற்ற சிரேஷ்ட அறிவிப்பாளராகிய பி.எச்.அப்துல் ஹமீட் இத்திரைப்பட தயாரிப்புக்கான கௌரவ வழிநடத்துனராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்பபடத்தின் இயக்குநரான கிங் ரட்ணம் இலங்கையின் முதுபெரும் மேடை, வானொலி மற்றும் திரைப்பட கலைஞரான திரு. எம்.எஸ்.ரத்திணத்தின் பேரனாவார். ‘கோமாளி கிங்ஸ்’ கிங் ரட்ணத்தின் முதலாவது முழு நீள பொழுதுபோக்கு திரைச்சித்திரமாகும்.

இத்திரைப்படத்தின் ஓளிப்பதிவாளராக மகிந்த அபேசிங்கவும், இசையமைப்பாளராக ஸ்ரீராம் சச்சி மற்றும் படத்தொகுப்பாளராக அஞ்சேலோ ஜோன்ஸ் பணியாற்றியுள்ளனர்.

மொத்தத்தில் கோமாளி கிங்ஸ்: ‘சிம்பிள் பட் அ மாஸ்டர் ப்ளான்’ (‘Simple but a master plan’)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg