Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஷ்ரப்பின் மரணம் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பசீர் வசம்!

In இலங்கை
Updated: 11:04 GMT, Mar 3, 2018 | Published: 10:42 GMT, Mar 3, 2018 |
0 Comments
1157
This post was written by : Anojkiyan

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பினுடைய மரணம் தொடர்பிலான விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை, தனக்கு கிடைக்கப்பெற்றதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், குறித்த அறிக்கையினை வழங்குமாறு பசீர் சேகுதாவூத் விண்ணப்பித்திருந்தமைக்கு அமைவாக, அந்த அறிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கை, ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் டப்ளியு.ஜே.எஸ். கருணாரத்னவினால் உறுதிப்படுத்தப்பட்டு, தகவலறியும் ஆணைக் குழுவுக்கு கடந்த 27ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்திலோ, சுவடிகள் கூடத் திணைக்களத்திலோ இந்த அறிக்கை இல்லை எனக் கூறப்பட்ட நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து ஜனாதிபதி செயலகத்தினால் கேட்டுப் பெறப்பட்ட இந்த அறிக்கையானது, உறுதிப்படுத்தப்பட்டு முத்திரையிடப்பட்டிருந்தது.

மேலும், இவ்வறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவலறியும் ஆணைக்குழுவின் முத்திரையும் பதிக்கப்பட்ட நிலையிலேயே, விண்ணப்பதாரர் பசீர் சேகுதாவூத்துக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg