யாழில் ‘இழப்பே இனி எம் பலமாய்’ எனும் தொனிப்பொருளில் உலக தாய்மொழி தின நிகழ்வு
In இலங்கை February 21, 2021 10:24 am GMT 0 Comments 1169 by : Dhackshala

‘இழப்பே இனி எம் பலமாய்’ எனும் தொனிப்பொருளில் உலக தாய்மொழி தின நிகழ்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கலை பண்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் தாய்மொழி தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக வாழ்நாள் பேராசிரியர் அருணாச்சலம் சண்முகதாஸ் மற்றும் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் கலந்துகொண்டிருந்த அதேவேளை, சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜாவும் கலந்துகொண்டிருந்தார்.
அத்தோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்ட ஆலோசகர்களான சட்டத்தரணி க.சுகாஸ், ந.காண்டிபன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.