எதிர்வரும் புதனன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
In இந்தியா December 28, 2020 12:44 pm GMT 0 Comments 1476 by : Jeyachandran Vithushan

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி விவசாயிகளை பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேற்று காலை 11 மணிக்கு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
இருப்பினும் எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விக்யான் பவனில் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி குறித்த விடயம் தொடர்பாக பேசுவதற்கு 40 விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.