இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து அமெரிக்கா எச்சரிக்கை!
In ஆசிரியர் தெரிவு January 18, 2019 2:03 am GMT 0 Comments 1529 by : Yuganthini
அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அண்மையில் நியமனம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் எலியட் ஏஞ்சல் மேற்குறித்தவாறு கூறியுள்ளார்.
மேலும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா.வினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இவ்வாறானதொரு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய சவேந்திர சில்வா மீது பாரிய போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், அவருக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளமை பொறுப்புக்கூறல் விடயத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளதென கூறியுள்ளார். அத்தோடு, போர்க்குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதில் எவ்வாறு நேர்மை நிரூபிக்கப்படும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.