பெருவின் முன்னாள் ஜனாதிபதி சற்றுமுன் உயிரிழந்தார்

பொலிஸாரின் கைதுக்கு அஞ்சி தற்கொலை முயற்சியாக தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.
பிரேசிலியக் கட்டுமான நிறுவனமான Odebrecht இடமிருந்து கையூட்டுப்பெற்றதாக அலன் கார்சியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக அவரைக் கைதுசெய்ய பொலிஸார் சென்றவேளையில் அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்.
இதையடுத்து பெரு நாட்டின் தலைநகரான லிமா-வில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு உடனடியாக கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அலன் கார்சியா உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்சியாவின் மரணத்தை பெரு நாட்டின் தற்போதைய ஜனாதிபதி மார்ட்டின் விஸ்காரா உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.