மங்குட் சூறாவளியின் தாக்கத்திற்கு தயாராகும் பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸூக்கு வடக்காக சுழன்று வரும் மங்குட் எனப்படும் ஐந்தாம் நிலை சூறாவளிக்கு மனிலா அனர்த்த முகாமைத்துவ முகவரக அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். அங்கு இயற்கை சீற்றம் காரணமாக பல இடங்களில் பதாதைகளும், பொது உடமைகளும் சேதமடைந்துள்ளன.
மங்குட் சூறாவளி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது என்று அமெரிக்க இணை புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக, பிலிப்பைன்ஸில் வட மாகாணங்களான ககாயன் மற்றும் பட்டனெஸ் ஆகியவற்றி கன மழை மற்றும் வௌ்ளப் பெருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சுமார் 900 க்கும் 1000 க்கும் இடைப்பட்ட கிலோமீற்றர் தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ள சூறாவளி 200 கிலோமீற்றர் வேகத்தில் தரையை கடந்து செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.